Sri Venkatesa Perumal Temple
ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில்
Sri Venkatesa Perumal Temple
a
உடுமலையின் உன்னதம்

கண்மொய்த்த கருமஞ்ஞை நடனமாட. வான்முழங்க

விண் மொய்த்த பொழில்வரி வண்டினம்

தேனயம்பாடும் திரைசூழ்ந்த அமராவதி திருமூர்த்தி

தண்சாரல் விரிந்த பொன்சேருஞ் செல்வம்

மல்கு மாநகர் உடுமலைப்பேட்டை

சாரற் சுனை மல்கு- நீலத்திடை வைகிச்

சிறைமல்கு குயிலும், குருகும் பாடி மகிழும்

பட்டிகள், புதூர்கள், பாளையங்கள்

மத்தம், முழவம், மழலை ததும்பவரை

நிழல் செந்தண் புனமுஞ் சோலையுடன்

நகர்கள், கிராமங்கள், புரங்கள், காலனிகள்

என எழுபத்து நான்கு ஊர்கள் சுற்றிலும்

சுகமுடன் வாழும் சுற்றத்தார் சூழ்ந்தது உடுமலை.

இச்சிறப்பு வாய்ந்த உடுமலையில் தொன்றுதொட்டு நாம் பக்தியையும் பண்பாட்டையும் போற்றி வளர்த்து வருகிறோம்.நமது பாரம்பரியம் மிக்க பண்பாட்டுடன் திருமலை திருவரங்கம் போன்ற திவ்ய தேசங்களில் நடைபெற்று வருவதுபோல பூஜா வேள்விகளும், திருவிழாக்களும், நிகழ்வுறும் ஒரு திருக்கோயிலை உடுமலைப்பேட்டையில் நமது காலத்தில் அமைத்திட வேண்டும் என்று காலமெல்லாம் கண்டு வந்த கனவை நனவாக்க விரும்பினோம்.

அதன் பொருட்டு 27.5.2013 அன்று திருப்பதியிலிருந்து திருப்பதி தேவஸ்தானத்தாரால் திருவேங்கடத்து உற்சவப் பெருமாள்,திருத்தேவியருடன் எழுந்தருளச் செய்யப்பெற்று, திருக்கல்யாண வைபவம் உடுமலையில் சிறப்புடன் நிகழ்வுற்றது. பல்லாயிரக்கணக்கான ஆன்மீக அன்பர்கள் கலந்துகொண்ட அந்த நிகழ்வே உடுமலையில் ஓர் திருப்பதி அமையவேண்டும் என்ற எண்ணத்திற்கு உந்துதலை ஈந்தது. அதன்பின்னர் 18.6.16 அன்று ஓர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் எடுத்த முடிவின்படி உடுமலை திருப்பதி ஸ்ரீபாலாஜி சேரிடபிள் டிரஸ்ட் நிறுவப்பட்டது.

நிர்வாக அறங்காவலராக திருமிகு V.ராமகிருஷ்ணன்,சரவணா குழுமம், திருமிகு M.வேலுசாமி, G.V.G. குழுமம், திருமிகு. M.அமர்நாத் G.V.G. குழுமம், ஆன்மீகப் புரவலர் திருமிகு.V.கெங்குசாமி நாயுடு அவர்களின் புதல்வர் திருமிகு.G.ரவீந்திரன் ஆகியோர் இந்த டிரஸ்டின் அறங்காவலர்களாகவும் பொறுப்பேற்றனர்

மேற்குத் தொடர்ச்சி மலைச்சாரலில், மும்மூர்த்திகளும் ஒரு மூர்த்தமாய்க் குடிகொண்டிருக்கும் திருமூர்த்திமலை தென் அரணாய் அமைந்து, கங்கையிற் புனிதமாய காவிரியில் சங்கமிக்கும் அமராவதி பாலாறுகளின் நடுவில், ஏழுகுளங்களில் இனிய குளமாய் வளங்கொழிக்கும் செங்குளக்கரையில் ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் திருக்கோயில் அமையப்பெற்றுள்ளது.

உடுமலை திருப்பதி

இப்புதிய கற்கோயிலின் அடிக்கல் நாட்டு விழா துர்முகி வருடம் ஆனி மாதம் 26-ம் நாள் (10.07.2016) ஞாயிற்றுக்கிழமை அன்று திருக்கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள், பாகவதர்கள், பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பாக நிகழ்வுற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர், மேலக்கோட்டை திருநாராயணபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமாநுஜ ஜீயர் சுவாமிகள் தலைமை ஏற்றும், தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்க மாநிலத்தலைவர் டாக்டர் V.கெங்குசாமி நாயுடு அவர்கள் முன்னிலை வகித்தும் இவ்விழாவினைச் சிறப்பித்தார்கள்.

ஸ்ரீ நிவாச கோவிந்தா கோவிந்தம்

ரமோ ரமணா கோவிந்தா கோவிந்தம்

நந்த நந்தன கோவிந்தா கோவிந்தம்

ஆஞ்சநேய வரத கோவிந்தா கோவிந்தம்

என்ற கோவிந்த கோஷங்கள் மண்ணதிர, விண்ணதிர மக்கள் உளம் மயங்க எங்கும் எழுந்து திருமூர்த்தி மலையிலும் எதிரொலித்தன.

ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் சன்னதி நடுநாயகமாக இலங்க, இருபுறமும், ஸ்ரீபத்மாவதித் தாயார், ஸ்ரீஆண்டாள் சன்னதிகள் அமைய உள்ளன. ஸ்ரீசக்கரத்தாழ்வார், ஸ்ரீலட்சுமிநரசிம்மர், ஸ்ரீலட்சுமிஹயக்ரீவர், ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீவிஷ்வக்சேனர், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீகருடாழ்வார் சன்னதிகளும் முறையாக அமைய உள்ளன.

உலகமக்கள், உய்யும்பொருட்டு, திவ்ய தேசங்களில் எழுந்தருளி அருள்பாலிக்கும் எம்பெருமான், உடுமலை திருப்பதியிலும் எழுந்தருள திருவுள்ளம் உவந்துள்ளார்.

திருமாலுக்கு 12 நாமங்கள் திருப்பெயர்கள்

கேசவ

நாராயண

மாதவ

கோவிந்த

விஷ்ணு

மது சூதன

திரி விக்ரம

வாமன

ஸ்ரீதர

ஹ்ருஷிகேச

பத்மநாப

தாமோதர

12 பெயர்களையும் சொல்லி உடலில் 12 இடங்களில் திருமண் (நாமம்) இருக்கின்றனர். நாமங்களைச் சொல்லி இடுவதால் தான் ‘நாமம்’ என்ற பெயர் ஏற்பட்டது.

ஸ்ரீநிவாச கோவிந்தா கோவிந்தம் ரமோரமணா கோவிந்தா கோவிந்தம் நந்த நந்தன கோவிந்தா கோவிந்தம் ஆஞ்சநேய வரத கோவிந்தா கோவிந்தம்.


பக்தியுடன்
ஓர் அன்பின் வேண்டுகோள்

‘கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டா’
‘கோவில் விளங்கினால் குடிவிளங்கும் ’

என்ற பழமொழிகளை உள்ளத்தில் பொதிந்து கொண்ட கண்ணியம் மிகு கம்மகுல மக்கள் நாம் தொன்று தொட்டு பக்தியையும் பண்பாட்டையும் போற்றி வளர்த்து வருகின்றார்கள். விஜயநகரப் பேரரசின் பிரதிநிதி களாய் தமிழகத்தை ஆண்ட மதுரை நாயக்க மன்னர்களின் பொற்கால ஆட்சியில் திருக்கோயில்களும் திருக்கோயில் சார்ந்த இயல், இசை நாடகக் கலைகளும், ஓவியம் சிற்பம் ஆகிய கலைகளும் பொலிவுடன் வளர்ந்தோங்கின. அப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாய் ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் திருக்கோயில் திருப்பணிகள் உடுமலை திருப்பதி ஸ்ரீ பாலாஜி சேரிட்டபிள் டிரஸ்ட் மூலமாக சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

புல்லினால் கோவில் அமைத்தவர் கோடி ஆண்டுகளும் புது மண்ணினால் கோவில் அமைத்தவர் 100கோடி ஆண்டுகளும் தூய செங்கற்களால் அமைத்தவர் 300கோடி ஆண்டுகளும் கருங்கல்லால் (கல்ஹாரம்) கோவில் அமைத்தவர்கள் ஸ்ரீ வைகுந்தத்தில் பேரின்பப் பெருவாழ்வும் பெறுவர் என்பதும் ஒரு பழம்பாடல் நவிலும் நற்பொருளாகும். நாமும் கல்ஹாரக் கோயில் அமைத்து வருகிறோம்.

கடல் என்றும் வற்றியதில்லை. கனவில் கூட நிலா சுட்டதில்லை. வானம் என்றும் வற்றியதில்லை. நம் மக்களின் கொடையும் பக்தியும் என்றும் குன்றியதில்லை.

இகத்திலும் பரத்திலும் பெரும் பேறுகளை அருளும் திருக்கோயில் திருப்பணியில் நம்மை அர்ப்பணித்துக் கொள்வோம். நீங்கள் உங்கள் அன்புக் குடும்பத்தாருடனும் அருமைச் சுற்றத்தாருடனும், திருப்பணிகள் நடைபெறும் பொழுது அடிக்கடி வருகை புரிய வேண்டும் என்றும் நன்கொடைகளை வாரி வழங்கி நல் ஆதரவினை நல்க வேண்டும் என்றும் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கின்றோம். எம்பெருமானுக்கு பக்தியும், ஆர்வமும் சேவையுமே தெவிட்டாத தேனினும் உவப்பானது.

இத்திருப்பணியை நம் உயிர்ப்பணியாய் பிறவிப்பேறாய்க் கருதி மனம் மொழி மெய்களால் கைங்கர்யம் ஆற்றிட வாரீர்! வாரீர்! என்று மனமுவந்து அழைக்கின்றோம்.


வங்கி விபரம்:

INDIAN OVERSEAS BANK

UDUMALPET BRANCH

UDUMALAI TIRUPATI SRI BALAJI

CHARITABLE TRUST

A/c.No.053401000032000

IFS Code: IOBA0000534

An appeal to NRIS

The blessings and the glory of Lord Venkatesa Perumal is to be felt and experienced by each and every individual. In order to elevate ourselves and surrender ourselves to Lord Venkatesa, Balaji Charitable Trust has taken up the monumental task of establishing a magnificient temple to Lord Sri.Venkatesa on the Banks of Senkulam, Udumalpet of Tirupur District Tamilnadu.

Temples for Sri.Padmavathi Thayar, Sri.Andal, Sri.Chakkarathalvar, Sri.Lakshmi Narasimhar, Sri.Dhanvanthiri, Sri.Viswakshenar, Sri.Anjaneyar, Sri.Hayagreevar, Sri.Gurudaalvar temples and the Raja Gopuram are being constructed with multi-dimensional artistic expressions.

The monumental structure needs your involvement, whole hearted support and co-operation. Your donations will make this task a grand success.

To expedite the process and complete this achievement the NRI devotees are solicited to offer their contributions in the form of cheque /DD/RTGS to the following bank.

Bank Details

Indian Overseas Bank

Udumalpet Branch

Udumalai Tirupati Sri.Balaji Charitable Trust

A/c.No: 053401000032000

IFSC CODE: 10BA0000534

We thank you all in advance for your Co-operation and consistent contribution towards this divine service.